கொடுமுடியாறு அணையிலிருந்து, பாசன பருவ சாகுபடிக்கு, தண்ணீர் திறப்பு!
திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு அணையிலிருந்து, பாசன பருவ சாகுபடிக்கு, தண்ணீர் திறப்பு! தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர்
மு. அப்பாவு, திறந்து வைத்தார்! திருநெல்வேலி,நவ.3:- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடி கிராமம், கொடுமுடியாறு அணையில் இருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கா.ப.கார்த்திகேயன் தலைமையில்,பயிற்சி ஆட்சியர் கிஷன் குமார் முன்னிலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, சிறப்புப்பூஜைகளுக்கு பின்னர், முறைப்படி திறந்து வைத்தார்.அடுத்த ஆண்டு [2024] மார்ச் 41-ஆம் தேதி முடிய, மொத்தம் 150 நாட்களுக்கு, வினாடிக்கு 100 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டுள்ள இந்த தண்ணீரினால், நாங்குநேரி வட்டத்தில் 6 கிராமங்களிலும், ராதாபுரம் வட்டத்தில் 10 கிராமங்களிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 5,781 ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும்." அணையில் இருந்து, திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை, விவசாயிகள் முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த முன்வர வேண்டும்!"- என, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு, கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர் மணிகண்ட ராஜன், களக்காடு நகராட்சி துணை தலைவர் பி.சி.ராஜன், நாங்குநேரி வட்டாட்சியர் விஜய் ஆனந்த், உதவி பொறியாளர் பாஸ்கர் உட்பட பலர், கலந்து கொண்டனர்.
Tags:
Comments:
Leave a Reply