திருநெல்வேலி பேட்டை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் கூடல் நிகழ்ச்சி!
திருநெல்வேலி பேட்டை, மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் கூடல் நிகழ்ச்சி!
திருநெல்வேலி,நவ.3:-
திருநெல்வேலியை அடுத்துள்ள, பேட்டை காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், இன்று [நவம்பர்.3] "தமிழ் கூடல்" நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை இவாஞ்சலின் பியூலா, தலைமை வகித்தார்.
முதுகலை பொருளாதார ஆசிரியர் ஜி. பொன்னுசாமி, அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில், திருநெல்வேலி டவுண், இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர் "முனைவர்" சங்கரன், "சிறப்பு" அழைப்பாளராக கலந்து கொண்டு, "தமிழின் சிறப்புகள் மற்றும் தமிழ் இலக்கியங்கள்" குறித்து, "சிறப்புரை" ஆற்றினார்.
"தமிழ் கூடல்" நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற, பல்வேறு போட்டிகளில் "வெற்றி" பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு அழைப்பாளர் சங்கரன், பரிசுகள் வழங்கி, வெகுவாக பாராட்டினார். நிகழ்ச்சியின் நிறைவில், முதுகலை தமிழாசிரியர் அண்டோ ஆரோக்கிய ஜோதி, அனைவருக்கும் நன்றி கூறினார்.
உடற்கல்வி இயக்குனர் சாம் நியூட்டன், முதுகலை ஆசிரியர் சரவணன் ஆகியோர் உட்பட, பலர் "தமிழ் கூடல்" விழாவில், கலந்துகொண்டனர்.
Tags:
Comments:
Leave a Reply