Thursday, November 21
Breaking News:
Breaking News:
ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு : அவசர வழக்காக விசாரிக்க முறையீடு!

ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு : அவசர வழக்காக விசாரிக்க முறையீடு!

ட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவல் நேற்றுடன முடிவடைததை தொடர்ந்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.       மேலும், அடுத்த காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜாரனால் போதும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் ஜாமீன் தொடர்பாக விசாரிக்க இந்த நீதிமன்றத்தில் அதிகார வரம்பு இல்லை என்றும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி கூறினார்.

இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் இன்று மனுத்தாகல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார்.




Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *