Wednesday, December 25
Breaking News:
Breaking News:
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி சிறந்த சேவை புரிந்த ஆசிரியர்களை பாராட்டி ஆசிரியர் செம்மல்விருது வழங்கும் விழா

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி சிறந்த சேவை புரிந்த ஆசிரியர்களை பாராட்டி ஆசிரியர் செம்மல்விருது வழங்கும் விழா

05.09.2023டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி சிறந்த சேவை புரிந்த ஆசிரியர்களை பாராட்டி ஆசிரியர் செம்மல்விருது வழங்கும் விழாசென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்ந்த அவரது இல்லத்தில்  நடைபெற்றது. நிகழ்ச்சியானது தமிழக கல்வி வளர்ச்சியை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பிலும் நடைபெற்றது விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர்  வைத்திலிங்கம் நீதியரசர் பிரகாஷ்  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கலைமாமணி முரளி சாந்தா பப்ளிகேஷன் உரிமையாளர்  ராஜாராம்  நிறுவன இயக்குனர்கள் ஆற்றுனர் வல்லுநர் ஆகியோர்களும் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிகௌரவித்தனர். விருதினை கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த கரையாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் பழனிச்சாமி‌ பெற்று விருது பெறுவதற்கு சுபாரிசு செய்த ரிஷிவந்தியம் வட்டார கல்வி அலுவலர் பழனிமுத்து அவர்களுக்கும் தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் கிருஷ்ணா ஸ்வீட் ஸ்டாலுக்கும் சின்ன கொள்ளியூர் சேரந்தாங்கல் பெரிய மணியந்தல்ஊர் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார். மேலும் இதுபோன்று விருதுகள் பெறுவது தமக்கு மகிழ்ச்சியாகவும் கற்பித்தலில் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *