திம்மாபுரம் கிராமத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி.... திரளான இளைஞர்கள் பங்கேற்பு..!
இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும் ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்படுவது புரட்டாசி மாதம் தான்
இந்த நிலையில பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் திருவிழா மற்றும் சாமி வீதி உலா வருவது வழக்கம் அந்த வகையில்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது
அக்ராமத்தில் உள்ள ஸ்ரீ துரோபதி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியை திம்மாபுரம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் உறியடித்தும் சறுக்கு மரம் ஏறி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர் இந்த உறியடி மற்றும் சரக்கு ஏறும் நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
இதற்கு முன்னதாக அலங்கரிக்கப்பட்ட வழியில் சாமி வீதி உலா வந்தது
Tags:
Comments:
Leave a Reply