திருநெல்வேலி சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி! மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள்!
திருநெல்வேலி,அக்.13:-
திருநெல்வேலியை அடுத்த, தாழையூத்து சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப் பள்ளியில் தர நிர்ணய கழகம்,
குடிமக்கள் நுகர்வோர் மன்றம்,, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சங்கர் நகர் உட்கோட்ட காவல்துறை ஆகியவை சார்பில், உலக தர நாள் போதை பொருள் தடுப்பு, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளி வளாகத்தில் இன்று (அக்டோபர்.13) நடைபெற்றன.
பள்ளித்தலைமை ஆசிரியர் உ.கணேசன் தலைமை வகித்தார்.
பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன், அனைவரையும் வரவேற்று பேசினார். உலக தர நாள் குறித்தும், தர முத்திரைகள் குறித்தும், பள்ளி தர நிர்ணய கழக திட்ட அலுவலர் கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன் உரை நிகழ்த்தினார். காவல் உதவி ஆய்வாளர் மயிலப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் கிறிஸ்டி, பெண் காவலர் பால்மதி ஆகியோர் போதை தடுப்பு, சாலை பாதுகாப்பு, காவல்துறை சட்டங்கள், பெண்கள் பாதுகாப்பு ஆகியன குறித்து, விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். தொடர்ந்து, அனைவரும் உலக தர நாள் மற்றும் போதை தடுப்பு தொடர்பான, உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். ஆசிரியப்பெருமக்கள், அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், இந்நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, பயன் பெற்றனர்.
Tags:
Comments:
Leave a Reply