Friday, December 27
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜ நகரில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மின்மாற்றிகள்! மக்களின் பயன்பாட்டிற்கு, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், அர்ப்பணித்தார்!

திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜ நகரில், 13 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மின்மாற்றிகள்! மக்களின் பயன்பாட்டிற்கு, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், அர்ப்பணித்தார்!

திருநெல்வேலி,அக்.6:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் சார்பாக, திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில், மகாராஜா நகர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட,  தியாகராஜ நகர் பகுதியில் "ரசிகமணி" டி.கே.சி. தெரு, கவிமணி தெரு, ராமலிங்கனார்தெரு ஆகிய, மூன்று இடங்களில், திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின்படியும்,  திருநெல்வேலி நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன்  வழிகாட்டுதலின் படியும்,  திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,  13 லட்சத்து, 40 ஆயிரத்து, 680 ரூபாய் மதிப்பீட்டில், தலா 25 கிலோ வோல்ட் மின்மாற்றிகள், புதிதாக நிறுவப்பட்டுள்ளன. இவற்றை, இன்று (அக்டோபர்.6) காலையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப் இயக்கி வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் காளிதாசன்,  உதவி செயற்பொறியாளர் சிதம்பரவடிவு,  உதவி மின் பொறியாளர்கள் வெங்கடேஷ், ஜன்னத்துல் ஷிபாயா, வளர்மதி, மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள், திரளாக கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *