Thursday, January 23
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி பேட்டையில், உம்ரா புனிதப்பயணம் வழிகாட்டுதல் முகாம்!

திருநெல்வேலி பேட்டையில், உம்ரா புனிதப்பயணம் வழிகாட்டுதல் முகாம்!

இஸ்லாமிய மதகுருமார்கள் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினர்! திருநெல்வேலி, செப்டம்பர்.13:- "பெர்பெக்ட் பிளானர்ஸ், டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்"

(PERFECT PLANNERS TOURS AND TRAVELS) நிறுவனம் சார்பாக, புனித மெக்காவுக்கு புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும், ஆன்மீகப்  பயணிகளுக்கு, உம்ரா வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாம், திருநெல்வேலியை அடுத்துள்ள, பேட்டை எம்.எப்.ஆர். (MFR) மஹால் திருமண மண்டபத்தில் வைத்து, இன்று ( செப்டம்பர்.13)  காலை முதல், நண்பகல் வரை நடைபெற்றது.

       இந்நிகழ்வை, ஹாஜி இக்பால் கிராஅத்( திருக்குர்ஆன் வசனம்)  ஓதி, துவக்கி வைத்தார்.

புனித  உம்ரா பயணம்  மேற்கொள்ளும் போது, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து,மவுலவி யூசுப் விளக்கிப் பேசினார்.

 விமான பயண விபரங்கள் மற்றும் நிறுவனத்தின் பயண  ஏற்பாடுகள் குறித்து, நிறுவனத்தின் முதன்மை  தலைவர். நெல்லை நிஜாம், இனிய முறையில், எளிய நடையில் எடுத்துக்  கூறினார். புனித உம்ரா பயணம் மேற்கொள்ளும்  அனைவருக்கும், நிறுவனத்தின்  சார்பாக, விலையில்லா பயணப்பைகள், வழங்கப்பட்டன. "புனிதப்பயணம் மேற்கொள்ளும் குழுவினர், இம்மாதம் (செப்டம்பர்) 25-ஆம் தேதி இங்கிருந்து புறப்பட்டு, திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம்,  சவூதி அரேபியாவில் உள்ள, புனித மக்கா மற்றும் புனித மதினா உள்ளிட்ட, புண்ணிய நகரங்களுக்கு, புனிதப்பயணம் மேற்கொண்டு, மதச்சடங்குகள் அனைத்தையும் நன்முறையில் நிறைவேற்றி விட்டு, அடுத்த மாதம் (அக்டோபர்) 26-ஆம் தேதி  தாயகம் வந்தடைகின்றனர்!"- என, பயண ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்தனர். மொத்தம்

 47 பேர்,  இந்த புனிதப்பயணம்  செல்வதாகவும், அவர்கள் மேலும் கூறினர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *