Thursday, December 26
Breaking News:
Breaking News:
திருநெல்வேலியில்,  குடோனில் புகுந்து வெட்டிக் கொல்லப்பட்ட, இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

திருநெல்வேலியில், குடோனில் புகுந்து வெட்டிக் கொல்லப்பட்ட, இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

திருநெல்வேலி,அக்.3:- திருநெல்வேலி பேட்டை திருப்பணிகரிசல்குளம் மணிமேடை தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் இளைய மகள் சந்தியா (வயது.18). இவர் நெல்லை டவுணில் பேன்சி கடை ஒன்றில், சேல்ஸ் கேள் ஆக வேலை பார்த்து வந்தார். நேற்று (அக்டோபர்.2) பிறாபகலில்,  அருகில் உள்ள குடோனுக்கு, சரக்கு எடுக்கச் சென்ற போது, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.  தகவல் அறிந்த மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணக்குமார், உதவி ஆணையாளர் சுப்பையா, இன்ஸ்பெக்டர் சுப்பு லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தியாவின் உடலைக் கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு,  உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மூன்று தனிப்படைகள் அமைத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சிந்தியா கடைக்கு அருகில் உள்ள, கவரிங் கடையில் வேலை பார்த்த, நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டியை அடுத்துள்ள தோப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுவன் ராஜேஷ் கண்ணன் என்பவர், சந்தியா தன்னுடன் வைத்திருந்த காதலை, திடீரென கைவிட்டதால் சந்தியாவை கொலை செய்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து, மூலக்கரைப்பட்டி போலீசார், சிறுவனை கைது செய்தனர். நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள, சிறார்கள்  கூர்நோக்கு இல்லத்தில், அடைத்தனர். இதற்கிடையே, பிரேத ப‌ரிசோதனை‌க்கு பின்னர்,  சந்தியாவின் உடலை வாங்க மறுத்து, திருநெல்வேலி டவுண் சொக்கப்பனை சந்திப்பில், சந்தியாவின் உறவினர்கள், திடீரென இன்று [அக்டோபர்.3] காலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.                           * சந்தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்க வேண்டும். * இழப்பீடு தொகை வழங்க வேண்டும்- ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ள போராட்டக்காரர்களுடன்,  போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால், பல மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *