நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., அவர்கள் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், அனிமூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டா
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், அனிமூர் ஊராட்சியில் இன்று (02.10.3023) அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தாமரைச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., அவர்கள், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
இக்கிராமசபை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கிராமசபை குறித்த கருத்துக்கள் அடங்கிய உரை காணொலி குறும்படம் ஒளிபரப்பட்டது.
தொடர்ந்து, கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டபணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை , ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தற்போது உள்ள பணி தொகுப்பின் ( Shelf of Project) முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல்,2023-2024ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக்குடியிருப்புத் திட்டம், 2023-24ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினைபொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை மக்கள் திட்டமிடல் இயக்கம் ( People’s Plan Campaign),காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ் பெண் குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து ஊராட்சிகளிலும் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்தல், மற்றும்
இதர பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பெண் குழந்தைகளுக்கான பாலின பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சிவக்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சுகந்தி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திருமதி.சுஜாதா தங்கவேல், துணைத் தலைவர் திரு.ராஜபாண்டியன், வேளாண்மை இணை இயக்குநர் திரு.துரைசாமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் திரு.அசோக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மாதவன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Tags:
Comments:
Leave a Reply