நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரமன்ற மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரமன்ற மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நிலைமை அசாதாரமாக போனதால் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது.
பின்னர் ஒரு மணி நேரம் நடந்த
கூட்டம் தொடர் அமளியால் பாதியில் நிறுத்தப்பட்டது.
சாலை பணிகளில் முறைகேடு நடந்ததாக அதிமுக குற்றம் சாட்டிய நிலையில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குன்னூர் நகரமன்றத்தின் மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடைபெற்றது
இதில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 24 பேரும் 6 அதிமுக மன்ற உறுப்பினர்கள் என 30 மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அதிமுக மன்ற உறுப்பினர்கள் பேசும் போது மேல்குன்னூரில் தரமில்லாத சாலை அமைக்கப்பட்டதில் லட்ச கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதில் திமுகவினர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனால் நகரமன்ற கூட்டத்தில் திமுக,அதிமுக உறுப்பினர்களுக்கிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
நிலைமை அத்து மீறி போவதை அறிந்த நகராட்சி ஆணையர் ஏகராஜ் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தார்
பின்னர் காவல் துறையினரின் பாதுகாப்புடன் கூட்டம் நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டம் தொடர் அமளியால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு மன்ற அரங்கில் வெளியேறினர்
Tags:
Comments:
Leave a Reply