Wednesday, December 25
Breaking News:
Breaking News:
மணம்பூண்டி கிராம சபை கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மணம்பூண்டி கிராம சபை கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் ஆபத்து காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத நிலையும், மழை நீர் காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் குலம் போல் ஆங்காங்கே காட்சியளிப்பதாகவும், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தும் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாக்கடையாக மாறுவதாகவும்,


 இதனால் டெங்கு, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல் வரக்கூடும் என்றும் மேலும் கிராம சபை கூட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஒரு சில ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வருவதில்லை எனவும்


 தீர்மானங்கள் நிறைவேற்றிய பின்பும் அதற்கு தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்திற்கு ஆர்வத்துடன் வருவது குறைந்து வருவதாகவும் ஒரு சில பொதுமக்கள் கூறுகின்றனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *