முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழ்பாடும், முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி
திருநெல்வேலி வந்து சேர்ந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழ்பாடும், முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி! ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், பார்த்து ரசித்தனர்! திருநெல்வேலி,நவ.5:- தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கருணாநிதியின் புகழுக்கு, மேலும் புகழ் சேர்க்கும் வகையில், இன்றைய இளம் தலைமுறையினருக்கு, கருணாநிதியின் பன்முகத்தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில், எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம், கருணாநிதியின் புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி பயணத்தை, கன்னியாகுமரியில் இருந்து, சென்னை வரை நடத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, இந்த அலங்கார ஊர்தி பயணத்தை, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பாக உள்ள, " "முக்கோணப்பூங்கா" அருகில், நேற்று (நவம்பர்.4) தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் " அன்பில்" மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர், கொடி அசைத்து, துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று (நவம்பர்.5) திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த முத்தமிழ்த்தேரினை, "தமிழக சட்டமன்ற பேரவை தலைவர்" மு.அப்பாவு வரவேற்று, தேரின் உட்பகுதிக்கு சென்று, பார்வையிட்டார். அத்துடன், திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ஞான திரவியம் ஆகியோர் முன்னிலையில், தேரின் உள்ளே நிறுவப்பட்டுள்ள, மார்பளவு சிலைக்கு, "மலர் மாலை" அணிவித்து, "மரியாதை" செய்தார். வள்ளியூரில் இந்த அலங்கார ஊர்தியை, ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், பார்த்து ரசித்தனர். வள்ளியூர் நிகழ்ச்சியில், ராதாபுரம் தாசில்தார் இசக்கிப்பாண்டியன், வள்ளியூர் பேரூராட்சிதலைவி ராதா, சமூக ஆர்வலர்கள் "முனைவர்" ம. கிரகாம் பெல், மி.ஜோசப் பெல்சி ஆகியோரும், திருநெல்வேலி நிகழ்ச்சியில், நெல்லை கோட்டாட்சி தலைவர் சேக் அய்யூப், மாவட்ட சமூகநல அலுவலர் தனலெட்சுமி, பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன், திருநெல்வேலி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என். மாலைராஜா, ஏ.எல்.எஸ். லெட்சுமணன் ஆகியோரும், பங்கேற்றிருந்தனர்.-----------------"TALKS OF INDIA"செய்திகளுக்காக, வள்ளியூரில் இருந்து, திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.
Comments:
Leave a Reply