Thursday, January 23
Breaking News:
Breaking News:
வீட்டிற்குள் புகுந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.

வீட்டிற்குள் புகுந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.

வீட்டிற்குள் புகுந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்.


திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி செல்லும் சாலையில் அச்சுதமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஜெயராமன் வயது 60 என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார் இவரது மனைவி பேபி வயது 55 மருமகள் புவனேஸ்வரி அவரது மகன்கள் லக்சன் தர்ஷன் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் எப்போதும் போல் இரவு உறங்கிக் கொண்டிருந்தனர்.


இந்த நேரத்தில் இன்று காலை லாரியில் டால்மியா புரத்தில் இருந்து சிவகுமார் என்பவர் சிமெண்ட் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஜெயராமன் என்பவர் வீட்டில் புகுந்தது இதில் ஐந்து பேரும் உள்ளே உறங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நன்னிலம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதே போல கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு டால்மியாபுரத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி வீட்டிற்குள் புகுந்து அப்போதும் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர்த்தப்பினர். அதேபோல கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நான்கு சக்கர வாகனமும் வீட்டிற்குள் புகுந்து அப்போதும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் இது மூன்றாவது முறையாக ஏற்பட்ட விபத்து இதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *