கத்தி முனையில் பணம் மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளியை கைது செய்த காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்டம் .திருக்கோவிலூர் உட்கோட்டம் மூங்கில் துறைபட்டு காவல் நிலைய சரகம் வட மாமந்தூர் காட்டு கொட்டாயில் 18.08.2023 ம் தேதி இரவு சுமார் 12.மணி அளவில் காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்த 68 - வயதுடைய மெல்கியார் S/o பெரியநாயகம் என்பவரை 3 -நபர்கள் வீட்டினுள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ 4000/=. Cell phone, வாட்ச்.' டார்ச்லைட் முதலியவற்றை கொள்ளை அடித்து சென்று விட்டதாக 18-08-2025ம் தேதி மூங்கில்துறைபட்டு காவல் நிலையத்தில் வாதி மெல்கியார் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட கொள்ளை வழக்கில் எதிரிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு மோகன் ராஜ் . IPS. அவர்களின் உத்தரவுப்படி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
திரு .மனோஜ்குமார் அவர்களின் மேற்பார்வையில் மூங்கில்துறைபட்டு காவல் நிலைய
உதவி ஆய்வாளர் திரு.சிவசந்திரன்.
திரு. இளங்கோவன். ஆகியோர் தலைமையில் உட்கோட்ட குற்ற பிரிவு முதல் நிலை காவலர் திரு.சிவஜோதி
திரு. வீரப்பன்
திரு. பாஸ்கரன்
திரு.மணிமாரன்
திரு .அசோக் குமார்
ஆகியோர் கொண்ட தனி படை அமைத்து எதிரிகளை தேடிவந்த நிலையில் இன்று திருக்கோவிலூர் வட்டம்
வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கார்திக் Age: 20 /23 என்பவரை தனிப்படையினர் பிடித்து விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டதின் பேரில் எதிரியிடமிருந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய 3-பட்டாகத்திகள், KTM Duke வண்டி, Celephone. Cash - Rs.4000/= இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்த கள்ளக்குறிச்சி Cyber cell காவலர்
திரு. சிவராமகிருஷ்ணன்
வழக்கின் புலன் விசாரணையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்து வழக்கு சொத்துக்களை மீட்ட உட்கோட்ட குற்ற பிரிவினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்
Tags:
Comments:
Leave a Reply