64 வருவாய் கிராமத்திற்கும் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட 64 வருவாய் கிராமத்திற்கும் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் சேஷன்சாவடி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் தனி வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட 64 வருவாய் கிராம மக்களிற்க்கான பட்டா மாறுதல் பட்டா பிழைத்திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், துணை ஆட்சியர் தேர்தல் சிவசுப்பிரமணியன் மற்றும் வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி, சேலம் தனி வட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த முகாமில் 500க் கும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த முகாம்களில் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வீட்டு மனைப்பட்டா, சிறப்பு இணைய வழிப்பட்டா விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, நகர மற்றும் நத்தம் நிலவரித் திட்டப் பட்டாக்கள், பட்டா மாறுதல் ஆணைகள் வன உரிமைச் சட்டத்தின் கீழான பட்டாக்கள் ஆகியவை தொடர்பான 300க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுவின் அடிப்படையில் ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றனர்.
இந்நிகழ்ச்சியில் வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக் பேளூர் வருவாய் ஆய்வாளர் ராதிகா பேளூர் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் முத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் சி.என்.பாளையம் சுதாகர் சேஷன்சாவடி கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் என அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்
Tags:
Comments:
Leave a Reply