23 கோடி ரூபாய் மதிப்பிலான, முறப்ப நாடு கூட்டுக்குடிநீர் திட்டம் உட்பட, மொத்தம் 690 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய,தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு
திருநெல்வேலி,அக்.8:- பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே, இன்று (அக்டோபர்8) முற்பகலில் நடைபெற்ற அரசு விழாவில், நெல்லை மாநகராட்சியின், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களின், புதிய விரிவாக்கப்பகுதிகளில், கூடுதல் குடிநீர் விநியோகம் செய்திடும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து, 10 நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைத்து, குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரக்கூடிய, 23 கோடியே, 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான, புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அடிக்கல் நாட்டினார். இன்று (அக்டோபர்.8) ஒரேநாளில் மட்டும், மொத்தம் 689 குடியே, 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய திட்டங்களுக்கு அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்! என்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து, பாளையங்கோட்டை "நேருஜி" சிறுவர் கலையரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், மொத்தம் 122 கோடியே, 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்றுள்ள திட்டப்பணிகளை, அமைச்சர் நேரு துவக்கி வைத்தார். இவ்விரு விழா நிகழ்ச்சிகளுக்கும், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு, தலைமை வகித்தார்.தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் "முனைவர்" தா.கார்த்திகேயன், தமிழக நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கா.ப.கார்த்தி கேயன் ஆகியோர், முன்னிலை வகித்தனர். விழாவில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞான திரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் வ.சிவ கிருஷ்ண மூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர்கள்,அலுவலர்கள் என, திரளானோர் கலந்து கொண்டனர்.
Comments:
Leave a Reply