Tuesday, December 24
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே வனத்துறை சார்பில் சோலை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே வனத்துறை சார்பில் சோலை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

ஊட்டி அருகே தலைக்குந்தா மற்றும் கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் பசுமை திட்டத்தின் கீழ் சோலை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது


 இதில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார் 

இதில் மாவட்ட ஆட்சியர் அருணா  அவர்கள் கூறுகையில் 

பசுமை தமிழ்நாடு திட்டத்தை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


 அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு அரசு துறைகளில் மூலம் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது   


முதற்கட்டமாக தலைக்குந்தா பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது 

நீலகிரி மாவட்டத்தில் தலைக்குந்தா பகுதியில் 50 மரக்கன்றுகளும் கீழ் கோத்தகிரி பகுதியில் 800 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டது


 மண்ணின் தரத்திற்கு ஏற்ப மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன 


இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் அருணா அவர்கள் கூறினார் 


தொடர்ந்து விழிப்புணர்வு கையேடுகளை வெளியிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்


இதில் மாவட்ட வன அலுவலர் கௌதம் உதவி வன பாதுகாவலர் தேவராஜ் ஊட்டி ஆர் டி ஓ மகாராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் உள்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்


டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *