பில்ராம்பட்டு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் முகையூர் மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், பில்ராம்பட்டு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு நடவடிக்கைக்காக வீடு வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது .இதில் முகையூர் வட்டார மருத்துவர் திரு சுகுமாரன் அவர்கள் முன்னிலையில் , கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் திருமதி சுபா அவர்கள், சித்தா மருத்துவர் திரு பாஸ்கர் சுரேஷ் குமார் அவர்கள் தலைமையில் , மேலும் பில்ராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கனகா பழனி மற்றும் ஊராட்சி செயலாளர் ஆரோக்கியதாஸ் அவர்கள் கிராமத்தில் உள்ள ஊர் பொது மக்களுக்கு , உயர் நிலை பள்ளி மாணவ மாணவிளுக்கு மற்றும் பொது இடம் ஆகிய பகுதியில் 1000 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் கிராம சுகாதார செவிலியர் செய்தனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.
Comments:
Leave a Reply