ரிஷிவந்தியத்தில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் பட்டா இடத்தில் உள்ள ஐந்து வீடுகளை தனி வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் இடித்ததை
ரிஷிவந்தியத்தில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் பட்டா இடத்தில் உள்ள ஐந்து வீடுகளை தனி வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் இடித்ததை தொடர்ந்து தற்காலிகமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரியை திரும்ப பணியில் அமர்த்த வேண்டும் என்று வருவாய் துறை சங்கத்தினர் தமிழக முழுவதும் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மீண்டும் தனி வருவாய் வட்டாட்சியருக்கு பணி நியமனம் அளித்தது போல் வீடுகளை இழந்து நிற்கும் எங்களுக்கும் வீடுகளை கட்டித் தாருங்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அமைச்சர் எ.வ.வேலுவிடம் மண்டியிட்டு கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் அனுமதியின்றி புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி வருவாய் தனி வட்டாட்சியர் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய் அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடித்துள்ளனர், அப்போது பட்டா இடத்தில் உள்ள ஐந்து வீடுகளை அதிகாரிகள் இடித்து விட்டு சென்றுள்ளனர், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர் அந்த புகாரின் அடிப்படையில் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டா இடத்தில் உள்ள வீடுகளை இடித்த தனி வருவாய் வட்டாட்சியர் மனோஜ் முனியனை தற்காலிக பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார் இதனை கண்டித்து அனைத்து வருவாய் துறை சங்கத்தினர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று நாடு தழுவிய புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்,இதனால் இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது,அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்யப்பட்ட தனி வருவாய் வட்டாட்சியர் மனோஜ் முனியனை மீண்டும் பணி நியமனம் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து இருந்த பாதிக்கப்பட்ட மக்கள் இன்று பகன்டை கூட்டு சாலை பகுதியில் அமைந்துள்ள வாணாபுரம் புதிய தாலுக்கா அலுவலக கட்டிட திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த அமைச்சர் எ.வ.வேலுவிடம் விழா மேடையில் சென்று மண்டியிட்டு கையெழுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க பட்டா இடத்தில் உள்ள எங்கள் வீடுகளை இடித்துவிட்டு தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கியது போல் வீடுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கும் வீடுகளை கட்டி தாருங்கள் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர், கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் எ.வ.வேலு இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் தெரிவித்தார்,விழா மேடையில் அமைச்சரிடம் வீடுகளை இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Tags:
Comments:
Leave a Reply