Wednesday, January 22
Breaking News:
Breaking News:
விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள் -பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஷால் பேட்டி!

விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள் -பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஷால் பேட்டி!

டிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள் என நடிகர் விஷால் தெரிவித்தார்.

நடிகர் விஷாலின் 46வது பிறந்தநாளையொட்டி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள

மெர்சி ஹோம் முதியோர் கருணை இல்லத்தில் நடிகர் விஷால் முதியோர்களுக்கு உணவு
வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார். முதியோர் இல்லம் வந்த நடிகர் விஷாலை வரவேற்ற கன்னியாஸ்திரிகள் நிலையில் உனவறையில் காப்பகத்தில் இருந்த உறவினர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

இதன் பின்னர் செய்தியாளர் சந்தித்த நடிகர் விஷால், 'முதியோர் இல்லத்தில்
பிறந்தநாள் கொண்டாடுவது கடவுளிடம் நேரில் வாழ்த்து பெறுகிற போல் உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு குறித்து மக்கள்தான் கூற
வேண்டும்.உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வருவது குறித்து எந்த கருத்தும்
கூறவிரும்பவில்லை என்றார்.

மேலும், 'சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட பட்டம், 45 வருடத்துக்கு
முன் கொடுக்கப்பட்ட பட்டம். 45 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக உள்ளார். இந்த
வயதிலும் அவர் நடிப்பது எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர்
ஓய்வெடுக்கலாம் ஆனால் மக்களை எண்டெர்டெயின் செய்ய வேண்டும் என நினைப்பதுதான் சூப்பர் ஸ்டாருக்கான அர்த்தம்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *