விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மனக்குப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பேருடன் வந்த இருசக்கர வாகனத்தை மறித்து விசாரணை செய்தனர்.அருகிலுள்ள கொரக்கந்தாங்கள் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கிரண்குமார்(22), செல்வம் மகன் ஏழுமலை(42) மற்றும் எம்.குன்னத்துரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் யுவராஜ்(36)என்பது தெரிய வந்தது மேலும் 5 மூட்டைகளில் 168 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.
Comments:
Leave a Reply