10 ஆண்டுகளுக்கு மேல் சீரமைக்கபடாத சேரும் சகதியும் ஆக உள்ள சாலை
பரிக்கல்பட்டு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் சீர்மிக்கப்படாத சேரும் சகதியும் ஆக உள்ள சாலை.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பரிக்கல்பட்டு கிராமத்தில் 4 வது
வாடிற்கு உட்பட்ட தெருவில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் சேரும் சகதியமாக காணப்படுகிறது. இதில் சிறுவர்கள் நாற்று நட்டு விளையாடும் அவல நிலையில் தெருக்கள் உள்ளதாகவும்,இந்த நவீன காலத்தில் இது போன்ற அவல நிலையில் தெருக்கள் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் அங்குள்ள நியாய விலை கடை மேற்கூறை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இதனை புரானமைப்பு செய்து தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க மீண்டும் எனவும் அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் ஆபத்திலிருந்து காக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்
Tags:
Comments:
Leave a Reply