Monday, December 23
Breaking News:
Breaking News:
Speaking4India: மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ்... தெற்கில் இருந்து ஒலிக்கப் போகும் அரசியல் குரல்!

Speaking4India: மு.க.ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ்... தெற்கில் இருந்து ஒலிக்கப் போகும் அரசியல் குரல்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்காக பேசுகிறேன் என்ற பெயரில் ஆடியோ சீரிஸ் ஒன்றை வெளியிட உள்ளார். தெற்கில் இருந்து ஒலிக்கும் இந்த அரசியல் குரல், வரும் 2024 மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி ’மனதின் குரல்’ (Mann Ki Baat) என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆடியோ வடிவில் மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இதை கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக செய்து வருகிறார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ சீரிஸ் ஒன்றை வெளியிட்டு நாட்டு மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்க முடிவு செய்துள்ளார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *