கோமுகி நதி அணையில் இருந்து, பழைய பாசன பரப்பு மற்றும் புதிய பாசன பரப்பு மூலம் 10860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், தண்ணீர் மதகுகளை திறந்து வைத்தார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை, மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, கோமுகி நதி அணையில் இருந்து, பழைய பாசன பரப்பு மற்றும் புதிய பாசன பரப்பு மூலம் 10860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், தண்ணீர் மதகுகளை திறந்து வைத்தார்கள்.இந்த நிகழ்வின் போது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், #ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் மாண்புமிகு.வசந்தம். க.கார்த்திகேயன்,B.Sc.,M.L.A., அவர்கள்...கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உயர்திரு. தா. உதயசூரியன் அவர்கள், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.A.J மணிக்கண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு.ஷ்ரவன் குமார் ஜடாவத் IAS,.அவர்கள் உட்பட, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர், ஒன்றிய பெரும் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்
Comments:
Leave a Reply