Sunday, November 24
Breaking News:
Breaking News:
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக மாநில கவுன்சில் நிதி உதவியுடன் பள்ளி குழந்தைகளிடையே அறிவியல் வளர்நிலைகளை பிரபலப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக மாநில கவுன்சில் நிதி உதவியுடன் பள்ளி குழந்தைகளிடையே அறிவியல் வளர்நிலைகளை பிரபலப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கே ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகின்றது இக்கல்லூரி, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் நிதி உதவியுடன் பள்ளி குழந்தைகளிடையே அறிவியல் வளர் நிலைகளை பிரபலப்படுத்துதல் உடல்நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக கே ஜி மருத்துவமனையின் மருத்துவர் விவேகா பிரியதர்ஷினி மற்றும் மருத்துவர் நித்தியானந்தன் கலந்து கொண்டனர், சுகாதாரம் பேணவேண்டியதன் அவசியம் பற்றி இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது, மேலும் சானிட்டரி நாப்கின்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு அதை எவ்வாறு சுகாதாரத்தோடு பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது  மருத்துவ நிபுணர்கள் மற்றும் குழுவினரால் சிறுமிகளுக்கு ஹீமோகுளோபின் மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஹீமோகுளோபின் அளவை சரியான முறையில் மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்  கோவை சரவணம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் உஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *