Sunday, November 24
Breaking News:
Breaking News:
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மாநில அளவில் இரண்டாம் இடம் டீன் மணி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்  தனபால் பெருமிதம்

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மாநில அளவில் இரண்டாம் இடம் டீன் மணி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் பெருமிதம்


தேசிய தன்னார்வ ரத்த தான முகாமில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த கொடையாளர் தினத்தைக் கொண்டு ரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது டீன் மணி தலைமை வகித்தார் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை இயக்குனர் சவுண்டம்மாள் வரவேற்றார் குடும்ப நலத்துறை இயக்குனர் வளர்மதி முன்னிலை வகித்தார் மாவட்ட ரத்த வங்கி அலுவலர் ரவீந்திரன் விளக்கவுரை ஏற்றினார் தொடர்ந்து ரத்ததான முகாம் அமைப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆர் எம் ஓ ஶ்ரீலதா மாநகர நல அலுவலர் யோகானந்த் காச நோய் பிரிவு துணை இயக்குனர் கணபதி எய்ட்ஸ்  கட்டுப்பாட்டு திட்டம் மேலாளர் அருணாச்சலம் ரத்த கொடையாளர்கள் பொதுமக்கள் ஆகியவற்றின் போது ரத்தம் தேவைப்படுகிறது ரத்தத்தில் தேவையை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ரத்ததானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ஆம் தேதி தேசிய தன்னார்வ ரத்தக் கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது நடபாண்டியன் கருப்பொருளாக தொடர்ந்து ரத்தம் பிளாஸ்மா தானம் செய்வோம் வாழ்வை பகிர்ந்து கொள்வோம் என்பதை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது 18 வயது முதல் 65 வயது வரை ஆண் பெண் பேதம் இன்றி அனைவரும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் அளிக்கலாம் ரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுகிறது ஒரு யூனிட் ரத்தத்தில் இருந்து நாலு உயிர்களை காப்பாற்ற முடியும் ரத்ததானம் செய்வதால் ஹீமோகுளோபின் அளவு ரத்த அழுத்தம் சீராகவும் சமச்சீராகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோஸ் என்ற இணையதளத்தில் ரத்ததான முகாம் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது அதன்படி மாநில அளவில் சென்னை எம் என் சி மருத்துவக் கல்லூரி 1184 யூனிட் ரத்ததானம் பெற்று முதலிடமும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 1.082 யூனிட் ரத்ததானம் பெற்று இரண்டாம் இடத்திலும் பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி ஆயிரம் யூனிட் ரத்ததானம் பெற்று மூன்றாம் இடத்திலும் மாவட்ட ரத்த வங்கியில் நடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 1.082 ரத்த தானம் வழங்கி உள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் எவ்வித புதிய வைரஸ்கள் காய்ச்சல்  பரவாமல் இருக்க மாஸ்க் அணிய வேண்டும் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் டீன் மணி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் அவர்களும் அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் சேர்ந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *