Tuesday, December 24
Breaking News:
Breaking News:
திருக்கோவிலூரில் சார்பதிவாளரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் நடைபெறவிருந்த  கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.

திருக்கோவிலூரில் சார்பதிவாளரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.

திருக்கோவிலூர் அக்டோபர்-03 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம்  மேலத்தாழனூர்  கிராமத்தில் வசித்து வரும் கண்ணன்- ராஜாம்பாள். என்பவருக்கு சொந்தமான சர்வே எண் 164 3 சி.3 எ,உள்ள நிலத்தை திருத்தல் பத்திரம் ஆவண எண் 3325 /2023. மேற்படி மோசடியாக பத்திரப்பதிவு செய்த திருக்கோவிலூர்  சார்பதிவாளரை கண்டித்து இன்று 03.10.2023 சார் பதிவாளர்  அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. ஆனால் இன்று03.10.2023 காலை 11 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடந்த  சமாதான கூட்டத்தில் கீழ்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்-1

திருக்கோவில் வட்டம் மேலத்தாயனூர் கிராம சர்வே எண்.164/3சி,3 தொடர்பான ஆவணங்களை திருக்கோவிலூர் சார் பதிவாளர் பரிசினலை செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அவர்களுக்கு விரிவான  அறிக்கைகளை இரண்டு தினங்களுக்குள் அனுப்பி வைக்கிறோம் என்று அரசு அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்து   தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

தீர்மானம்-2,

திருக்கோவிலூர் வட்டம் மேலத்தாயனூர் கிராம சர்வே எண் 164/3சி, 3ஏ,தொடர்பான புலன் எண்களை வருவாய்த்துறை மூலம் நேரடி புலத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு பரப்பு திருத்தம் செய்வதான முன்மொழிவு அறிக்கையினை திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியருக்கும் மாவட்ட பதிவாளர் அவர்களுக்கும் அனுப்பிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .அமைதி பேச்சுவார்த்தையில் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.இராமசாமி, ஒன்றிய செயலாளர் கே.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சிவகுமார்,AIYF-மாவட்ட செயலாளர், எஸ்.விஜய், நகர செயலாளர் பி.எச்.கிப்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அஞ்சாமணி, மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *