திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வலையாம்பட்டு கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து மறுபரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வலையாம்பட்டு கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து மறுபரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் வலையாம்பட்டு கிராமம் ஆதிதிராவிடர் காலணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு இடத்தில் குடிசை வீடுகளும் சிலர் சிறு கடைகளும் நடத்தி பிழைத்து வருகிறோம்.
ஆதி திராவிடர் பகுதி புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வளையம் பட்டு ஆதி திராவிடர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
தங்களுக்கு ஒரு நல்ல முடிவு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் தங்களின் பரிந்துரையின் படி வருவாய் கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் வருவாய் துறையால் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறாகவோ அல்லது ஊர் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்குமேயானால் நாங்களே முன்வந்து அகற்றி விடுகிறோம் என்று மனுவில் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார்.
Tags:
Comments:
Leave a Reply