Tuesday, December 24
Breaking News:
Breaking News:
வாழப்பாடியில் வாழப்பாடி உட்கோட்ட காவல்துறை மற்றும் வாழப்பாடி விளையாட்டு சங்கம்  இணைந்து போதை ஒழிப்பு மற்றும் சமூக நீதி விழிப்புணர்வு மாநில அளவிலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

வாழப்பாடியில் வாழப்பாடி உட்கோட்ட காவல்துறை மற்றும் வாழப்பாடி விளையாட்டு சங்கம் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் சமூக நீதி விழிப்புணர்வு மாநில அளவிலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வாழப்பாடி உட்கோட்ட காவல்துறை மற்றும் வாழப்பாடி விளையாட்டு சங்கம் சார்பில் போதை ஒழிப்பு மற்றும் சமூக நீதி விழிப்புணர்வு மாநில அளவிலான பெண்கள் மற்றும் ஆண்கள் மாரத்தான் போட்டி வாழப்பாடி விளையாட்டு சங்க தலைவர் பாலமுருகன் சிவராமன் தலைமையிலும் வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் ஹரி சங்கரி வாழப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பொன்னம்பலம் வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோரது முன்னிலையில் மாரத்தான் போட்டி  நடைபெற்றது.



இப் போட்டியை வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் ஹரிசங்கரி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதில் சேலம், தர்மபுரி, விருதுநகர், கன்னியாகுமரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1000கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



அதைத் தொடர்ந்து வட்டார மருத்துவர் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றப்பட்டு பின்பு மூன்று கிலோமீட்டர் ஐந்து கிலோ மீட்டர் பத்து கிலோமீட்டர் 15 கிலோ மீட்டர் என ஆண்கள் பெண்கள் இருவரும் கலந்து கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 12 இடத்தைப் பிடித்து வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற இரண்டு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி மகாத்மா மாற்றுத்திறனாளி சங்கம் சோசியல் சர்வீஸ் மாரத்தான் போட்டிகளில்  தமிழ்நாடு முதல் டெல்லி வரை சென்று 2500 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு உறுதுணையாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குனர் ஆர்த்தி உறுதுணையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் பதக்கங்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *