Monday, December 23
Breaking News:
Breaking News:
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் பயிற்சி, மற்றும் வழிகாட்டும் மையம்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் பயிற்சி, மற்றும் வழிகாட்டும் மையம்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் பயிற்சி, மற்றும் வழிகாட்டும் மையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் துவக்கம்  

ஆதிபராசக்தி பல்மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் இன் இன்னவேஷன் ஆன்ட்ரப்ரணர்ஷிப் மற்றும் ஸ்டார்ட் அப் ப்ரமோஷன் ஆக்டிவிட்டிஸ் (Centre of Excellence in innovation, Entrepreneurship and startups promotion Activities) மைய தொடக்கவிழாவின் அறிமுக நிகழ்ச்சி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் மரு. வேணி அஷோக் அனைவரையும் வரவேற்றார். இம்மையம் மாணவர்களின் ஆக்கப்பூர்வமான எண்ணங்களை மேம்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அவர்களைத் தொழில் முனைவோர் ஆக மாற்றுவது என்பதே அடிப்படையான  பணியாகும். வேலை தேடுவதைக் காட்டிலும் வேலையை உருவாக்குவது சிறந்தது என்ற கருத்தினை முன்வைத்து இம்மையும் துவங்கப்படுகின்றது என்றும்  அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்த கருத்தை மூலதனமாக வைத்து இன்று உயர்ந்துள்ளது எனக் கல்லூரியின் தாளாளர் மருத்துவர் T. ரமேஷ் அவர்கள்  எடுத்துரைத்தார். இதுபோன்ற பல உத்திகள் உங்களிடம் இருந்து வரவேண்டும் எனக்  கேட்டுக்கொண்டார். இந்த அமைப்பை ஹேண்ட் இன் ஹேண்ட் அகாடமி ஃபார் சோஷியல் அன்ட்ரப்ரணர்ஷிப் உடன் இணைந்து செயல்பட உள்ளது. அதன் இயக்குநர் சந்திரசேகர் அவர்கள் நிகழ்ச்சியில் இதுவரை உருவாக்கிய11 புதிய ஸ்டார்ட் அப் பற்றிய குறிப்புகளை வழங்கினார். எஜிஎம்  எஸ்.ஹாஸ்வி 30 மாதங்களில் நாம் எப்படியும் 10 ஸ்டார்ட் அப் துவங்கி அதனை வெற்றி பெற வைக்கும் வழியினை மாணவர்களுக்கு விளக்கினார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *